செயற்கை நுண்ணறிவு விளக்கப்படம்காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த ஸ்டாலின் கோரிக்கைமேகதாது அணைத் திட்டம் குறித்து முதல்வர் விஜய்க்குக் கடிதம்
மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 14 அன்று கடிதம் எழுதினார்.
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைச் சட்ட வழியில் பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்து அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
