செயற்கை நுண்ணறிவு விளக்கப்படம்கட்டிட வரைபடங்களைச் சரிபார்க்கப் புதிய நடைமுறைபதிவுபெற்ற கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள் சான்றளிக்கலாம்
குறிப்பிட்ட வகை வீடுகள், வணிக மற்றும் தொழில் கட்டிடங்களுக்கு அனுமதி கோரும்போது, வரைபடம் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா எனப் பதிவுபெற்ற நிபுணர்கள் சான்றளிக்கும் முறையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கட்டிடக் கலைஞர் கவுன்சிலில் பதிவுபெற்றவர்கள் அல்லது தமிழக ஒற்றைச் சாளரத் தளத்தில் பதிவுபெற்ற முதல் நிலைப் பொறியாளர்கள் சான்றளிக்கலாம். வீடுகளுக்கு, கணக்கில் கொள்ளப்படும் தளப் பரப்பு 750 சதுர மீட்டர் வரை, உயரம் 14 மீட்டர் வரை, குடியிருப்புகள் எட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் வரைபடம், நில ஆவணங்கள் உள்ளிட்டவற்றைத் தமிழக ஒற்றைச் சாளரத் தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கடலோர ஒழுங்குமுறைப் பகுதிகள் உள்ளிட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது.
